Show all

உடன்படித்த மாணவன் தொல்லை தாளாமல், மாணவி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

மராட்டியத்தில் உடன்படித்த மாணவன் ஆபாசமான தகவல்களை முகநூலில் வெளியிட்டதால், 14வயது சிறுமி தற்கொலை செய்துக் கொண்டார்.

10ஆம் வகுப்பு மாணவனால் தொடங்கப்பட்ட போலியான முகநூல் கணக்கில் ஆபாச தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மாணவி வீட்டின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மாணவியை, மாணவன் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து உள்ளான் என்று அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர், போலீசாரும் மாணவனைப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

போலீஸ் புகாரால் கோபம் அடைந்த மாணவன் போலியான முகநூல் கணக்கை தொடங்கி உள்ளான் என்று கூறப்படுகிறது. போலியான முகநூல் கணக்கை மாணவியின் பெயரில் தொடங்கி, ஆபாசமான தகவல்களை வெளியிட்டு உள்ளான். இதனை முகநூல்; பதிவில் பார்த்த மாணவி, அவமானம் தாங்க முடியாமல், வீட்டின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவமானது கடந்த 20ம் தேதி நடைபெற்று உள்ளது. இதுதொடர்பாக மாணவனை போலீசார் கைது செய்து உள்ளனர். அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.