Show all

தமிழகத் தேர்தல் சோதனைகளுக்கு அஞ்சி மாற்று வழியில் தொடரும் செம்மரக்கடத்தல்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜமுனாமரத்தூரை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், அடிக்கடி ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சென்று, செம்மரம் வெட்டி வருகின்றனர். இதில், ஆந்திர மாநில காவல்துறையினரிடம் சிக்கி சிலர் சிறைக்கு செல்கின்றனர். இதனால், ஆந்திர மாநில காவல்துறையினர், வனத்துறையினர் ஜமுனாமரத்தூருக்கு சென்று, அவர்களது குடும்பத்தினரை சந்தித்து,

செம்மரம் வெட்ட ஆந்திராவுக்கு வர வேண்டாம், இங்கேயே மாற்றுத் தொழில் செய்யுங்கள் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அதிகாரி ஸ்ரீவச்சா தலைமையில் வந்த வனத்துறையினர், நேற்று ஜமுனாமரத்தூர் சென்று, செம்மரம் வெட்டும் தொழிலாளர் குடும்பத்தினரை சந்தித்து பேசினர். அப்போது ஸ்ரீவச்சா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் நடப்பதால், ஆந்திரா- தமிழக மாநில எல்லைகளில், அதிகளவு சோதனை சாவடி அமைத்து, தமிழக காவல்துறையினர் வாகனச் சோதனை செய்கின்றனர். இதனால், இந்த வழியாக வந்தால் மாட்டிக் கொள்வோம் என, கடத்தல்காரர்கள் நினைத்து ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் வழியாக, கர்நாடகா மாநிலத்துக்கு செம்மரம் வெட்டி கடத்துகின்றனர். இதனால், அனந்தபுரம் வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் வழியில், 20 சுங்கச்சாவடிகள் அமைத்து, 24 மணி நேர வாகனச் சோதனை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.