Show all

கார்த்தி சிதம்பரம், சொத்துகளைக் குவித்துள்ளதாக ‘தி பயோனியர்’

ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் கிடைத்த பணத்தின் மூலம் முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், 14 நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, சொத்துகளைக் குவித்ததாக ‘தி பயோனியர்’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தி பயோனியர்’ நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ஆதாயம் அடைந்ததுள்ளார்.

இதில் நடந்த பண பரிமாற்றம் பற்றி சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது.

அமலாக்கத்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் போது பல ரகசிய ஆவணங்கள் சிக்கின.

இதில் கார்த்தி சிதம்பரம், பிரிட்டன், தென்னாப்பரிக்கா, தாய்லாந்து , இலங்கை, மலேஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 14 நாடுகளிலும்,

துபாய், லண்டன் போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளார்.

 

 

     கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் துணை நிறுவனம் மூலம் 14 நாடுகளில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

 

 

      பிரிட்டனில் 2011ம் ஆண்டில் பல கோடி மதிப்பிலான சொத்து கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது;

     இலங்கையில் மிகவும் பிரபல சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்-க்கு சொந்தமான ஓட்டல்கள், ரிசார்ட்களில் பெருமளவு பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

 

 

     துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்’, சூபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி நிறுவனங்களும் கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

 

ஐக்கிய நாடுகளின் பணமோசடி தடுப்பு கூட்டறிக்கையின் கீழ், 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள முதலீடுகள் குறித்த ஆவணங்களைப் பெறுவதற்கு அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.