Show all

கச்சத்தீவில் கடற்படை தளம் கட்டுகிறதா இலங்கை

கச்சத்தீவில், ஒரு புதிய தேவாலயத்தை இலங்கை கடற்படை கட்டி வரும்நிலையில் ஏற்கனவே அங்கு உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை இடித்துவிட இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், கடற்படை தளம் கட்டப்போவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கச்சத்தீவில் கடற்படை தளம் கட்டுகிறதா இலங்கை?

நடுவண் அரசு விளக்கம்;:

கச்சத்தீவில், ஒரு புதிய தேவாலயத்தை இலங்கை கடற்படை கட்டி வருகிறது. இதனால் அங்கு ஏற்கனவே உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை இடித்துவிட இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், கடற்படை தளம் கட்டப்போவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கச்சத்தீவில், 1905-ம் ஆண்டில் இருந்து புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. அது சிதிலமடைந்த நிலையில் இருப்பதால், யாழ்ப்பாண பேராயரின் வேண்டுகோளின் பேரில், அந்த ஆலயத்துக்கு 100 மீட்டர் தொலைவில் புதிய தேவாலயம் கட்டப்பட்டு வருகிறது. பழைய தேவாலயத்தை அப்படியே வைத்திருக்க இலங்கை முடிவு செய்துள்ளது. கச்சத்தீவில், கடற்படை தளம் அமைத்து வருவதாக கூறப்படுவதை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.