Show all

சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணை குழு அறிக்கை பற்றி இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதம், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஐ.நா. விசாரணை குழு அறிக்கை, மிக மோசமாக இருந்திருக்கும். நம்பகமான நடவடிக்கைகள் மூலம் நாங்கள் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றோம். இலங்கையைச் சேர்ந்த யாரும் சர்வதேச குற்றவியல் கோர்ட்டு முன்பு நிறுத்தப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா கூறுகையில், ‘ஐ.நா. அறிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. ஏனென்றால், பொருளாதார தடை அபாயத்தை தவிர்த்து விட்டோம்’ என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.