Show all

சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளார். புதிய இயக்குனர;.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ‘‘நேஷனல் ஹெரால்டு’’ என்ற பத்திரிகையைகத் தொடங்கினார். இந்தப் பத்திரிகை தற்போது வெளிவரவில்லை.

இதை காங்கிரஸ் கட்சி கடந்த 2010-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி நிதியில் இருந்து கணிசமான தொகை வழங்கப்பட்டது

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களைப் கைப்பற்றவே காங்கிரஸ் நிதியைச் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் தவறாக பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். மேலும், பத்திரிகையை வாங்கியதற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கில் சில சட்டரீதியிலான காரணங்களுக்காக சோனியா, ராகுலை தொடர்புபடுத்த முடியாது என்று கூறி அமலாக்கத் துறையின் முன்னாள் இயக்குநர் ராஜன் எஸ்.கடோச் விசாரணையை முடித்துக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் அமலாக்கத் துறை இயக்குனர் பதவியில் இருந்து கடந்த 15-ந்தேதி ராஜன் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னால் சிங் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

அவர் சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளார். மேலும் இந்த விசாரணையை முடித்து வைப்பதாக ராஜன் கூறிய பரிந்துரையையும் ரத்து செய்தார்.

இதைத் தொடர்ந்து சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார் விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. சோனியா, ராகுல் உள்ளிட்ட 5 காங்கிரஸ் தலைவர்கள் மீதும் விரைவில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.அவர்களுக்கு அனுப்பபட்ட சம்மனுக்கான தடையை நீக்கி அவர்களிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் சோனியா, ராகுல் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.