Show all

உங்களுடைய தலையை வெட்டித் தாருங்கள் என்று ஸ்மிரிதி இரானியிடம் மாயாவதி

உங்களுடைய தலையை வெட்டித் தாருங்கள் என்று நடுவண்அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் மாயாவதி கேட்டார்.

டெல்லி மேல்-அவையில் கடந்த 24-ந்தேதி ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா பற்றிய விவாதம் நடந்தபோது ஸ்மிரிதி இரானியும், பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதியும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

 

அப்போது தனது பதில் மாயாவதிக்கு திருப்தி அளிக்காவிட்டால் தன் தலையை வெட்டி அவருடைய காலடியில் வைப்பேன் என்று ஸ்மிரிதி இரானி கூறி இருந்தார்.

 

     ரோகித் வெமுலா தற்கொலை குறித்து விசாரணை நடத்த அலகாபாத் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரூபன்வால் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை நடுவண் அரசு அமைத்திருப்பது பற்றி மாயாவதி பேசும்போது,

     இந்த விசாரணைக் கமிஷனில் தலித் உறுப்பினர் இருக்கிறாரா? என்று 24-ந்தேதி கேட்ட கேள்விக்கு இதுவரை நடுவண் அரசிடம் இருந்து பதில் இல்லை. ரூபன்வால் உயர்சாதிக்காரர்.

     நடுவண் அரசு நினைத்தால் இந்த விசாரணை கமிஷனில் இன்னும் சில நீதிபதிகளை நியமிக்கலாம். ஒருவரை மட்டுமே நியமித்து இருப்பதன் மூலம் குற்றவாளிகளை நடுவண் அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது.

2 நாட்களுக்கு முன்பு தனது பதிலில் திருப்தி அடையவில்லை என்றால் தன் தலையை வெட்டி எனது(மாயாவதி) காலடியில் வைப்பதாக ஸ்மிரிதி இரானி கூறினாரே, இப்போது உங்கள் பதில் எனக்கு திருப்தி தருவதாக இல்லை. எனவே அளித்த வாக்குறுதிப்படி தனது தலையை வெட்டி வந்து அவர் எனது காலடியில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது.

மன்னிப்பு கேட்டது யார்?

மேலும், பாராளுமன்ற நுழைவு கூடத்தில் ஸ்மிரிதி இரானியுடன் ஒரு விஷயத்தை பேசியதாக குறிப்பிட்ட மாயாவதி, நீங்கள் நுழைவு கூடத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டீர்கள். மன்னித்துவிட்டேன். ஆனால் உங்களுடைய பதிலுக்கு பிறகு உங்களை இந்த நாடு மன்னிக்காது என்று ஆவேசமாக கூறினார்.

அதற்கு ஸ்மிரிதி இரானி, ‘‘உங்களிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை. கேட்டது நீங்கள்தான். அன்று பாராளுமன்றத்தில் உங்களது பேச்சைக் கேட்கவிடாமல் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்ப அனுமதித்து இருக்கக்கூடாது என்று நீங்கள்தான் கூறினீர்கள்’’ என்றார்.

இருவருக்கும் இடையே விவாதம் நீண்டு கொண்டே போவதைப் பார்த்த அவையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மறுநாள் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதை நினைவு படுத்தும் விதமாக, ‘‘உங்களுடைய சொந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. மற்ற பிரச்சினைகளையும் நாம் விவாதிக்கவேண்டி இருக்கிறது. இன்று வௌ;ளிக்கிழமை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்’’என்று கூற அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.