Show all

சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளது

நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், 75 ஆயிரம் எக்டேர்கள் விவசாய நிலத்தை முற்றிலுமாக பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக மாற்றியிருப்பதன் வாயிலாக சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளது. வருகிற 18-ந்தேதி கேங்டாக்கில் நடக்க உள்ள விவசாய கருத்தரங்கில் இதை பிரதமர் மோடி முறைப்படி அறிவிக்கவுள்ளதாக சிக்கிம் ஆர்கானிக் மிசன் தெரிவித்துள்ளது.

 

12 ஆண்டுகளுக்கு முன்பாக 2003-ல் பவான் சாம்ளிங் தலைமையிலான அரசு சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும் என சட்டசபையில் அறிவித்து இருந்தது. பிறகு, விவசாய நிலங்களில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. மேலும் ரசாயன உர விற்பனையும் தடை செய்யப்பட்டது. இதனால், இயற்கை விவசாயத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு உருவானது. இதன் எதிரொலியாக தற்போது சிக்கிம் இயற்கை விவசாய மாநிலமாக உருவாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.