Show all

ஷாருக்கான் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக சாம்னா தலையங்கம்

ஷாருக்கான் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இதையொட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,

நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை. சகிப்பின்மை உச்சத்தில் இருக்கிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பாரதீய ஜனதா தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

ஷாருக்கான் இந்தியாவில் வாழ்ந்தாலும், அவருடைய ஆன்மா பாகிஸ்தானில் தான் உள்ளது என்று பா.ஜனதா தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கண்டனம் தெரிவித்தார்.

தவிர, ஷாருக்கானை பாகிஸ்தான் தீவிரவாதி ஹபிஷ் சயீத்துடன் இணைத்து கருத்து வெளியிட்ட பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் அவரை பாகிஸ்தானுக்கு செல்லுமாறு எச்சரித்தார்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, நடிகர் ஷாருக்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பரபரப்பான இந்தச் சூழ்நிலையில், ஷாருக்கான் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில்,

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மராட்டியத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருமாறு பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிக்கு பா.ஜனதா முதல்-மந்திரி அழைப்பு விடுத்தார். ஒரு பக்கத்தில் நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள்.

மற்றொரு பக்கம், ஷாருக்கானைபு; பாகிஸ்தானுக்குப் போக சொல்கிறீர்கள். இது பா.ஜனதாவால் அரங்கேற்றப்படும் இரட்டை வேடம்.

ஷாருக்கான் ஒரு கலைஞன். சகிப்புத்தன்மை விவகாரத்தில் அவரை அரசியல்வாதிகள் இழுக்க கூடாது. அவர் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவரை குறி வைத்து விமர்சிப்பது சரியானது அல்ல. குலாம் அலி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் மந்திரி குர்ஷித் முகமது கசூரி விவகாரத்தால் இந்தியாவின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டதாக கூறியவர்கள், ஷாருக்கான் அத்தியாயத்தில் தடுமாறிவிட்டனர்.

எல்லையில் அமைதி திரும்பும் வரை பாகிஸ்தான் உடனான சமூக, கலாசார மற்றும் அரசியல் உறவுகளுக்கு சிவசேனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். பொதுமக்களின் உணர்வுகளை சிவசேனாவின் நடவடிக்கை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.