Show all

வேண்டும்; வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவுசெய்த 600கோடிக்கு வெள்ளையறிக்கை: மு.க.ஸ்டாலின்

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து அதிமுக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்,

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஏதோ பருவம் தவறி பெய்தமழை அல்ல. இந்த பருவத்தில் மழை பெய்யும் என்று தெரிந்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு எவ்வித சாக்கும் போக்கும் கூறி அதிமுக அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்க முடியாது.

விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தைப் பறிகொடுத்து நிற்கிறார்கள். ஒட்டு மொத்தமாக மக்களின் சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது. மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு சென்று வெள்ளச் சேதப் பகுதிகளை இன்று பார்வையிட்டேன். தங்கள் துயரங்களை மக்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இருளில் கிடக்கின்றன. இன்னும் பல கிராம மக்கள் தங்கள் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு போக முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டு தவிக்கிறார்கள்.

ஆகவே, வௌ;ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், தங்கள் பயிரை இழந்த விவசாயிகளுக்கு போதிய நஷ்ட ஈடும் உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.