Show all

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வரலாறு படைத்த பெண்ணுக்கு அடி உதை! உறவினர்கள் தாக்கினார்களாம்

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவைப் பெண்களும் செல்லலாம் என உச்சஅறங்கூற்று மன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக சார்பு ஹிந்துத்துவா அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. 

இதனால் சபரிமலையில் தடை செய்யப்பட்ட அகவைப் பெண்களால் செல்ல முடியவில்லை. ஆனால் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (அகவை 44), பிந்து அம்மிணி  (42) என்ற 2 பெண்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலையில் ஐயப்பனை வணங்கினர்.

சபரிமலையில் நுழைந்த இந்த இரு பெண்களுக்கும் போராட்டகாரர்களால்  அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கனகதுர்கா தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். கனதுர்காவை அவரது உறவினர்கள் தக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பெருந்தில்மன்னாவில் உள்ள  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.