Show all

ஆர்.கே.சிங் பீகார் பாஜக தலைமை மீது பரபரப்பு புகார்.

பீகாரில் கிரிமினல்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட பாஜக சீட்டளித்துள்ளதாக அக்கட்சி எம்.பி. ஒருவரே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் 4 கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பாஜக மட்டும் 160 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய உள்துறை செயலாலருமான ஆர்.கே.சிங் பீகார் பாஜக தலைமை மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கிரிமினல்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட பாஜக மாநில தலைமை அனுமதித்துள்ளதாக பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பீகாரில் தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா கூட்டணிக்கும் இடையே சமபலம் நிலவுவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.சிங்கின் குற்றச்சாட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுவதால் பாஜக வட்டாரங்கள் பரபரப்பு அடைந்துள்ளன. இதனிடையே கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராம் விலாஷ் பஸ்வானின் கட்சி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மன்ஜியின் கட்சிகளில் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.