Show all

ஜும்பா லஹிரிக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதினை பராக் ஒபாமா வழங்கினார்;.

எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான ‘புலிட்ஸர் விருது’ பெற்ற அமெரிக்காவாழ் இந்தியப் பெண்மணியான ஜும்பா லஹிரி என்பவருக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதினை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கி கவுரவித்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு முதல் அமெரிக்க அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய மனிதநேய விருதுக்கு பிரபல எழுத்தாளரான ஜும்பா லாஹிரி தேர்வு செய்யப்பட்டார். தனது கற்பனை சார்ந்த கதைகளின் மூலம் இந்திய-அமெரிக்க காலாசாரச் செறிவை அழகுபட விவரித்தமைக்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை  மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜும்பா லாஹிரிக்கு தேசிய மனிதநேய விருதினை வழங்கி சிறப்பித்தார். இவருடன் மேலும் 8 பேருக்கும் இதே விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் அதிபர் ஒபாமா பேசியது,

அபார திறமை பெற்ற கண்டுபிடிப்பாளர்களையும், சிந்தனையாளர்களையும் கவுரவிக்கும் இந்த விழா எனக்கு மிகவும் பிடித்தமான விழா என்று குறிப்பிட்டார். இன்று இந்த கவுரத்தை பெற்றுள்ள இவர்கள் எல்லாம் அரிதான உண்மைகளை பகிர்ந்து கொண்டமைக்காகவும், தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்காகவும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை. மாறாக, மனிதர்களாகவும், அமெரிக்கர்களாகவும் நாம் அனைவரும் பெற்ற பொது அனுபவங்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியமையால் இந்த விருதினை பெற்றுள்ளனர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.