Show all

ஏழு வங்கிகளுக்கு இந்தியக் கட்டுபாட்டு வங்கி அபராதம்! விதிகளை முறையாக பின்பற்றாதவை காரணம்

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பார்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் என்பது பழமொழி. பயிரைப் பார்க்க வேண்டியது உழவன் கடமை ; கடனைக் கண்காணிக்க வேண்டியது வங்கியின் கடமை என்பது தான் இதன் அடிப்படை.

உழவன் பயிரைப் சரியாகப் பார்த்தும் பயிர் விளையவில்லை என்கிற மழையின் காரணமும் ; அதற்கு இயற்கையை முறையாக பின்பற்றாத அரசுகள் காரணமும், பயிர் சிறப்பாக விளைந்தும் விலை கிடைக்காத அரசின் காரணமும் இருந்து கொண்டிருக்கிறது இந்தியாவில் ; இங்கே உழவன் சரியாக இருக்கிறான்.

நமது வங்கிகள் எளிய மக்களுக்கு கடன் கொடுத்தால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமே என்பதற்காகவே, வசிதியாய் இருப்பவர்களுக்கே வங்கியை வாரிக் கொடுத்து விட்டு வாரக்கடன் பட்டியல் தயாரித்து விட்டால் போதும் என்று கருதுகிறது.

வசதியானவர்கள் வங்கியை வாரி சுருட்டிக் கொண்டு வெளி நாடுகளுக்கு ஓடி விடுகிறார்கள். எனவே   வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன், அதே காரணத்திற்காக சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பன போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டியது வங்கிகளின் கடமை. 

ஆனால், அந்தக் கடமையைச் சரிவர செய்யாததாகப் புகார் எழுந்ததையொட்டி, கடந்த கிழமையில் இந்திய மாநில வங்கிக்கு கட்டுபாட்டு வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. 

இந்நிலையில், தற்போது அதே காரணத்திற்காக, அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு  தலா ஒன்றரை கோடி ரூபாயும், ஆந்திரா வங்கிக்கு ஒரு கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.

நிதி பயன்பாட்டை கண்காணித்தல், மற்ற வங்கிகளுடன் தகவல்களை பரிமாறுதல் மற்றும் மோசடி குறித்து தகவல் பரிமாற்றம் செய்தல் ஆகியவை தொடர்பாக வங்கிகளுக்கு கட்டுப்பாட்டு வங்கி ஏற்படுத்தி உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றாததால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 

இதேபோல,  எச்.டி.எப்.சி, ஐ.டி.பி.ஐ, கோடக் மகிந்திரா ஆகிய மூன்று வங்கிகளுக்கும் தலா 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,063.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.