Show all

ஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் அடிலெய்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படின் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் புஜாரா அதிகபட்சமாக 123 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து,  தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் சர்மா,  சமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதைத்தொடர்ந்து, 15 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா (71) மற்றும் ரஹானே (70) ரன்கள்  குவித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் லையன் 6 விக்கெட்டுகளும், ஏ. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி போராடி 291 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.