Show all

தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டம்.

தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை, வருகிற தீபாவளியை முன்னிட்டு நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான ரஜினி, கமல் உள்ளிட்ட மொத்தம் 3,500 நபர்களுக்கும் விழாக்கால பரிசு அளிக்க உள்ளது.

ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் உறுப்பினர்களுக்கு ஒரு பை இனிப்பும் வழங்கப்படும். இந்தப் பரிசுப் பொருள்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டுக்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.