Show all

நிதிப்பற்றாக்குறை காரணமாக நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என தமிழக அரசு பதில்

தமிழகச் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தமது தொலைகாட்சிக்கு அனுமதி அளிக்க கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தமிழக அரசு நேரடியாக அரசு தொலைக்காட்சியான பொதிகையில் ஒளிபரப்பு செய்திட உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மணி சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு மக்களுக்கு தெரியபடுத்துவது தமிழக அரசின் கடமை என்று வாதிட்டார்.

நிதிப்பற்றாக்குறை காரணமாக நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என தமிழக அரசு பதில் அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் நீதிமன்றம் அனுமதித்தால் விஜயகாந்திற்கு சொந்தமான தொலைக்காட்சியில் சட்டப்பேரவை நிகழ்வுகளை இலவசமாக ஒளிபரப்ப தயாராக இருப்பதாக கூறினார். இதனைக் கேட்ட நீதிபதிகள் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். தேவையானால் மனுதாரர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகலாம் என தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.