Show all

சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் பிரசாரத்திற்கு ராகுல் திட்டமிட்டுள்ளார்.

பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அங்கு பிரசாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் பிரசாரத்திற்கு ராகுல் திட்டமிட்டுள்ளார்.

மோடி, சோனியா ஆகியோர் பிரசாரம் செய்த போதிலும், மோடி மீண்டும் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பாஜ அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த முறை நடைபெற்ற சோனியாவின் பிரசார கூட்டத்தில் ராகுல் பங்கேற்கவில்லை. இதையடுத்து வருகிற 19ம் தேதி அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.  சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் பாஜவுக்கு எதிராக தனது பிரசாரத்தை வலுப்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.

ராகுல் பிரசாரத்தையொட்டி மேற்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள ராம் நகரில் மிகப் பெரிய பிரசார கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி சோனியா கலந்து கொண்ட கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு இணையாக இதையும் நடத்திக்;காட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இருந்த போதிலும் இந்த கூட்டத்தில் லாலு பங்கேற்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக அவரது மகன் தேஜஸ்வி பங்கேற்பார் என ஆர்ஜேடி வட்டாரங்கள் கூறுகின்றன.

ராகுலுக்கும் லாலுவுக்கும் ஆகாது என்றும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் வகையிலானச் சட்டம் கொண்டு வருவதற்கு ராகுல் தடையாக இருந்ததால் இந்த விவகாரத்தில் ராகுலுக்கும், மாட்டு தீவன வழக்கில் தண்டனை பெற்ற லாலுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து ஜேடியூ செய்தி தொடர்பாளர் தியாகி கூறுகையில், நிதிஷ் பங்கேற்பார். ஆனால் ஆர்ஜேடி தரப்பில் இருந்து யார் கலந்து கொள்வார்கள் என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.