Show all

வெறும் ரூ.68 க்கு ஐஃபோன் கிடைத்த பழம் நழுவி பாலில் விழுந்த கதை

மாணவன் நிகிலுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இந்த ஐஃபோனின் உண்மையான விலை ரூ.28999. ஆனால் இந்த மாணவனுக்கு வெறும் ரூ.68 க்கு இந்த ஐஃபோன் கிடைத்துள்ளது.

 ஸ்னேப்டீல் நிறுவனத்தின் இணையதளத்தில் ஐஃபோன் 5எஸ்-ஐ ஆர்டர் செய்த பஞ்சாப் பலகலைக்கழக

ஸ்னேப்டீல் இணையதளத்தில் நிகில் ஐஃபோன் 5எஸ்-ஐ ஆர்டர் செய்த போது ஏதோ தொழில்நுட்ப கோளாரால் அவருக்கு 99.7 விழுக்காடு சலுகை கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நிகில் உடனே அந்த ஐஃபோனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஸ்னேப்டீல் நிறுவனம் அந்த மாணவனுக்கு ஐஃபோனை வழங்க மறுத்துவிட்டது.

 

இதனால் மாணவன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கான 99.7 விழுக்காடு சலுகையை ஸ்னேப்டீல் நிறுவனம் வழங்க மறுப்பதாக தனது புகாரில் கூறியிருந்தார். இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் ஸ்னேப்டீல் நிறுவனம் நிகிலுக்கு சலுகை விலையுடன் ஐஃபோனை வழங்கவும் மேலும் ரூ.2000 கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

ஆனால் ஸ்னேப்டீல் நிறுவனம் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் ஸ்னேப்டீல் நிறுவனம் கூடுதலாக ரூ.10000 மற்றும் அந்த ஐஃபோனையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

மாணவனுக்கு ரூ.68-க்கு ஐஃபோன் மற்றும் 10000 ரூபாய் கிடைத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.