Show all

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அறிவிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நிமியத்து, குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.

அந்தமான் நிக்கோபர் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங், கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் பார்த்து வந்தார். ஏ.கே.சிங் அந்தமான் நிக்கோபருக்கும், புதுச்சேரிக்கும் மாறி, மாறி செல்வதால் பல்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு பணிகள் தாமதம் ஆவதாகவும், எனவே, புதுச்சேரிக்கு தனி துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

 

இந்நிலையில், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து, புதியதாக காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி பொறுப்பேற்க இருக்கிறது.

 

இந்நிலையில், புதுச்சேரிக்கு புதிய துணைநிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான கிரண்பேடியை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

 

இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான கிரண்பேடி ஓய்வு பெற்ற பின், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த அண்ணா ஹசாரே, கெஜ்ரிவால் ஆகியோர் மூலம் அரசியலில் நுழைந்தார்.

 

கடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததையடுத்து, அரசியலில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.