Show all

கார் கேட்டு அடம்; இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முறிவு

வரதட்சணையாக கார் கேட்டு அடம் பிடித்து, மூன்று முறைக்கு மேல் தலாக் கேட்டதால் திருமணமான இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததுள்ளது. உத்தரபிரதேசம் ரபாஹ்பத்தில் உள்ள பாஹ்பட் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிசா, இவருக்கும் பஹ்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டினர் வரதட்சணையாகக் கேட்ட எல்லா பொருட்களையும் பெண்வீட்டினர் கொடுத்தாக தெரிகிறது. இருப்பினும் சீர்வரிசையில் கார் இல்லாத காரணத்தினால், மோனிசாவை, ஆரிப் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மோனிசா அழுது கொண்டே இருந்தாகவும், தன்னுடைய புகுந்த வீட்டுக்குப் போக மறுத்தாகவும் தெரிகிறது. இதையடுத்து இந்த சம்பவம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பஞ்சாயத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், ஆரிப், மோனிசாவிடம் விவாகரத்து கேட்டதால், திருமணமான இரண்டு மணி நேரத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தவிர, மோனிசா வீட்டினருக்கு ரூ. 2.25 லட்சம் ரூபாய் அபராதமாக கொடுக்கவேண்டும் எனவும், ஆரிப் 3 ஆண்டுகளூக்கு வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது எனவும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.