Show all

31 பேருக்கு மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெறப்படுகிறது.

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவு உள்ளிட்ட 31 பேருக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெறப்படுகிறது.

முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் ஜென், எஸ்.கே.சின்கா, கே.ஜி.பாலகிருஷ்ணன், உத்ரகாண்ட் கவர்னர் கே.கே.பால், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுபோத்காந்த் சகாய், வி.நாராணசாமி ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பிரிவுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

மேலும், முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் அவரது குடும்பத்தில் உள்ள அவரது மனைவி, மகள்கள், மருமகன், பேரன்கள் உள்ளிட்ட 8 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவுகளை திரும்பப் பெறப்பட உள்ளது.

இது தவிர, மறைந்த முள்ளாள் இந்திய பிரதமரின் நெருங்கிய உதவியாளர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் முதன்மை செயலாளர் ஜித்தன் பிரசதா, தொழில் அதிபர் நவீன் ஜிண்டால், முன்னாள் எம்.பி. டி.கே.ஏ.நாயர், அப்துல் ரஹீத் ஷகின், ஆர்.கே.தவான், டெல்லி முன்னாள் கவர்னர் தேஜேந்திர கண்ணா, கோபால் சுப்பிரமணியம் உள்பட 31 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.