Show all

சபரிமலைக்கு அரசு பேருந்தில் பொன்.ராதாகிருஷ்ணன்! தமிழகம் போல, பாஜக குதர்க்கவாதிகளின் நியாயம் கேரளாவில் எடுபடவில்லை

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின் அவர் பக்தர்களோடு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை நோக்கி அனுப்பப்பட்டார். 

பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலையில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றார். தொண்டர்களுடன் உள்ளே செல்ல முயன்றார். அவருடன் வந்த சில பாஜகவினர் மாலை அணியவில்லை. அதேசமயம் நிறைய பேர் கூட்டமாக வந்ததால் அங்கு கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனால் நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேரளா காவல்துறையினரால் பம்பை அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. நடுவண் இணையமைச்சரை எப்படி தடுக்கலாம் என்றும், அவர் முறையாக மாலை அணிந்து செல்கிறார் என்றும் பாஜகவினர் சண்டையிட்டனர். 

இந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் செல்ல முயன்றதால்தான் உள்ளே அனுமதிக்கவில்லை என்று காவல்துறையினர் விளக்;கம் அளித்தனர். 

சபரிமலையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நடுவண் அரசுக்கு அறிக்கை தரவேண்டும்  என்று ஆணையிடப்பட்டுள்ளதாக  பொன்.ராதாகிருஷ்ணன் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. அதிலெல்லாம் எந்த நியாயமும் இல்லை என்று கூறி, பொன்.ராதாகிருஷ்ணனை மட்டும் தனியாக சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது தொண்டர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர் பக்தர்களோடு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை நோக்கி அனுப்பப்பட்டார். காரில் எல்லாம் அனுப்ப முடியாது பேருந்தில் மட்டும்தான் செல்ல முடியும் என்று உறுதியாக காவல்துறை கூறியதால் அவர் பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டது. தமிழகம் போல, பாஜக குதர்க்க வாதிகளின் நியாயம் கேரளாவில் எடுபடவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,978.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.