Show all

TVS ஸ்டார் சிட்டி + மாடலுக்காக MS டோனி மற்றும் பிரபு தேவா நடிப்பில் கலக்கலான பொங்கல் சிறப்பு விளம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு TVS ஸ்டார் சிட்டி + மாடலுக்காக MS டோனி மற்றும் பிரபு தேவா நடிப்பில் சிறப்பு விளம்பர படத்தை வெளியிட்டுள்ளது தமிழ் நாட்டை சேர்ந்த TVS நிறுவனம். இந்த விளம்பரம் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. மேலும் இந்த விளம்பரம் தற்போது தொலைகாட்சி சேனல்களிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரத்தில் ஒரு புதிய ஷோரூமை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் இருக்கும் டோனி திறந்து வைக்கிறார். அப்போது அந்த ஷோ ரூமின் ஊழியர் ஒருவர் TVS ஸ்டார் சிட்டி + மாடலை டெஸ்ட் டிரைவ் செய்ய சொல்கிறார். அப்போது வேட்டி சட்டையில் இருக்கும் டோனி வண்டியில் ஏற சிரமப்படுகிறார். அப்போது பிரபு தேவா அவருக்கு எவ்வாறு வேட்டியை மடித்து கட்டுவது என்பதை ஆடி காட்டுவது போன்று விளம்பரம் அமைந்துள்ளது.

இந்த விளம்பரம் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/OAR92co3eq8

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.