Show all

மதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர்

மதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தார். பின் திமுகவுடன் கூட்டணி சேரும் என்று மாவட்ட நிர்வாகிகளிடமும் அவர் தெரிவித்தார். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மகள் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதன்பின், திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் தமிழரசுவின் மகன் திருமணத்தில் வைகோ கலந்து கொண்டு, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வாழ்த்தியதோடு, அவர்கள் செய்த தியாகங்களையும் குறிப்பிட்டார். இதனால் திமுக கூட்டணியில் கண்டிப்பாக மதிமுக சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக வைகோ அறிவித்தார். ஆனால் அவர்கள் மதிமுகவை மதிக்காமல் குறைந்த சீட் கொடுத்ததோடு அவமானப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். அதன்பின் நடந்த நாடாளுமன்ற  தேர்தலில் பாஜ கூட்டணியில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் மதிமுக தோல்வி அடைந்தது. இதனால் திமுக கூட்டணியில் போட்டியிட்டால் அதிகமான எம்எல்ஏக்கள் வெற்றிபெறலாம் என்ற நிலை ஏற்பட்டதால் தொண்டர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் திடீரென்று கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த மக்கள் நல கூட்டணியில் சேர்வதாக அறிவித்த வைகோ, அவர்களுடன்தான் மதிமுக கூட்டணி அமைக்கும் என்று திருப்பூர் மாநாட்டில் அறிவித்து விட்டார்.

மேலும் கூட்டணி குறித்து கட்சியினருடன் எந்த ஆலோசனையையும் அவர் செய்யவில்லை என்று கட்சியினர் கூறி வந்தனர். இதனால் கட்சிக்குள் கடுமையான விவாதம் உருவானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்டச் செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மதிமுகவின் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதில் மாசிலாமணி தனது விலகல் கடிதத்தில், திருப்பூர் மாநாட்டில் திராவிடத்தால் வாழ்ந்தோம், வாழ்வோம். ஒரு போதும் விழ மாட்டோம் என்று திக தலைவர் வீரமணி கூறியதோடு, தன்மானமா? இனமானமா? எது முக்கியம்.

இந்தக் கேள்விக்கு தன்மானத்தை இழக்க நேரிட்டாலும், இனமானத்தை இழந்து விடக்கூடாது என்று பெரியாரின் பொன்மொழியை கோடிட்டு காட்டி தேர்தலுக்கான கூட்டணியில் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்ற வேண்டுகோளையும் வைத்தார். ஆனால், அந்த மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவித்தது, திராவிட இயக்க எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாகிவிடும் அபாயத்தை கண்டு நான் அதிர்ச்சியுற்றேன். நான் இனி மதிமுகவில் தொடர்வது இயலாது என்று முடிவு எடுத்து இதுவரை கட்சிப் பணிக்காக தொண்டாற்றிய நான், தற்போது மதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கனத்த இதயத்தோடு விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதே கருத்தைத்தான் மதுரை மாவட்டச் செயலாளர் சரவணனும் கூறியுள்ளார். இதேபோல மதிமுகவில் உள்ள மேலும் சில மாவட்டச் செயலாளர்களும் அடுத்தடுத்து அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் செய்யவில்லை என்று கட்சியினர் கூறி வந்தனர். இதனால் கட்சிக்குள் கடுமையான விவாதம் உருவானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்டச் செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மதிமுகவின் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதில் மாசிலாமணி தனது விலகல் கடிதத்தில், திருப்பூர் மாநாட்டில் திராவிடத்தால் வாழ்ந்தோம், வாழ்வோம். ஒரு போதும் விழ மாட்டோம் என்று திக தலைவர் வீரமணி கூறியதோடு, தன்மானமா? இனமானமா? எது முக்கியம். இந்த கேள்விக்கு தன்மானத்தை இழக்க நேரிட்டாலும், இனமானத்தை இழந்து விடக்கூடாது என்று பெரியாரின் பொன்மொழியை கோடிட்டு காட்டி தேர்தலுக்கான கூட்டணியில் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

ஆனால், அந்த மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவித்தது, திராவிட இயக்க எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாகிவிடும் அபாயத்தை கண்டு நான் அதிர்ச்சியுற்றேன். நான் இனி மதிமுகவில் தொடர்வது இயலாது என்று முடிவு எடுத்து இதுவரை கட்சிப் பணிக்காக தொண்டாற்றிய நான், தற்போது மதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கனத்த இதயத்தோடு விலகுகிறேன் என்று கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் மதுரை மாவட்டச் செயலாளர் சரவணனும் கூறியுள்ளார். இதேபோல மதிமுகவில் உள்ள மேலும் சில மாவட்டச் செயலாளர்களும் அடுத்தடுத்து அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.