Show all

தி.மு.க., தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவர்: கருணாநிதி.

தி.மு.க., தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவர் என்று கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

திமுக நியமனக் கட்சியல்ல; பெரிய ஜனநாயக இயக்கம்; பெரும்பான்மை விருப்பப்படியே இங்கு எல்லாம் நடக்கும் என்று பல முறை சொல்லியாகி விட்டது.

கட்சியின் பொதுக் குழுவும், செயற் குழுவும் கூடி மேற்கொள்ள வேண்டிய முடிவை நான் ஒருவன் மட்டும் தனித்து எடுத்து அறிவித்து விட முடியாது. நான் அறிவிக்காமலேயே கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி மிக்கவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.