Show all

பலவீனமான வங்கிகளை பலமான வங்கிகளோடு இணைப்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கை.

கருப்புப் பண விவகாரத்தில் மென்மையான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்காது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நமது வளங்கள் (நிதி) அனைத்தையும் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியமானது.

எந்தவொரு நாடும் தங்களது வளங்கள், வங்கிக் கட்டமைப்புக்கு (கருப்புப் பணம்) வெளியே இல்லாமல், கட்டமைப்புக்கு உள்ளே இருக்க வேண்டும் எனக் கூறுவது சட்ட ரீதியான உரிமையாகும்.

அதேவேளையில், கருப்புப் பணத்தை தாமாக முன்வந்து திரும்பக் கொண்டு வருவதற்கான நியாயமான வாய்ப்புகளை நாம் வழங்கி விட்டோம் என்றார் ஜேட்லி.

வங்கிகள் இணைக்கப்படும்: பலவீனமாக இருக்கக் கூடிய பொதுத் துறை வங்கிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், பலவீனமான வங்கிகளை பலமான வங்கிகளோடு இணைப்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றார் அவர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.