Show all

ஆக்ஸ்போர்டு பொருளாதார குழு தகவல்! இந்தியா: முதலாவதாக தமிழகம், அடுத்து தென் மாநிலங்களைச் சார்ந்தே அமைகிறது.

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டை நோக்கி வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் மூன்று நகரங்கள் திருப்பூர் 8.36 விழுக்காடு, திருச்சி 8.29 விழுக்காடு சென்னை 8.17விழுக்காட்டுடன் முன்னணி வகிக்க இந்தியாவில் 25 விழுக்காட்டுடன்  முதலிடம் பெறுகிறது தமிழகம். இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பொருளாதார வளர்ச்சி தமிழகத்;தையே சார்ந்து இருக்கிறது.

அடுத்து இரண்டாவது இடம் பெறும் மாநிலமாக குஜராத் 9.17 விழுக்காடு ராஜ்கோட் 8.33 நகர வளர்ச்சியினால் குஜராத் மாநிலம் அமைகிறது.

அடுத்து மூன்றாவது இடம் பெறும் மாநிலம் 8.58 விழுக்காடு ஆக்ரா நகர வளர்ச்சியினால் உத்தரப் பிரதேசம் அமைகிறது. உத்தரப் பிரதேச வளர்ச்சிக்கு முகமதியர் விட்டுச் சென்ற தாஜ்மகால் பேருதவியாக இருக்கிறது.

அடுத்து நான்கவது இடம் பெறும் மாநிலமாக 8.5 விழுக்காடு பெங்களூரூ நகர வளர்ச்சியினால் கருநாடக மாநிலம் அமைகிறது.

அடுத்து ஐந்தாவது இடம் பெறும் மாநிலமாக 8.47 விழுக்காடு ஐதராபாத் நகர வளர்ச்சியினால் தெலுங்கானா மாநிலம் அமைகிறது.

அடுத்து ஆறாவது இடம் பெறும் மாநிலமாக 8.41 விழுக்காடு நாக்பூர் நகர வளர்ச்சியினால் மகாராஷ்டிர மாநிலம் அமைகிறது.

அடுத்து ஏழாவது இடம் பெறும் மாநிலமாக 8.16 விழுக்காடு விஜயவாடா நகர வளர்ச்சியினால் ஆந்திர மாநிலம் அமைகிறது. ஜிடிபி தரவுகளை வைத்து இந்தப் பட்டியலை ஆக்ஸ்போர்டு பொருளாதார குழு கணித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,993.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.