Show all

ஒரு முறை கிணற்றில் விழுவோம், மற்றொரு முறை ஏரியில் விழுவோம்: மோடி பேச்சு

தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள தேர்தல் சற்று மாறுபட்டது. ஏன் என்றால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் முன் பாஜக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

 

ஓசூரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் லஞ்சத்தை முற்றிலும் ஒழித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதை நோக்கிய பாதையில் பயணிக்கிறோம். சரியான திசையில் நாட்டை செலுத்துகிறோம்.

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிலக்கரித் துறையில் ஊழல்  நடந்துள்ளது.  2ஜி மற்றும் 3ஜி என முந்தைய காங்கிரஸ் ஆட்சி காற்றிலும் ஊழல் செய்தது.

 

யூரியா சரியான முறையில் கிடைக்கவில்லை என்று ஏராளமான மாநிலங்களில் இருந்து புகார்கள் வந்தன. ஆனால், யூரியா விநியோகத்தை முறைப்படுத்தி உள்ளோம். தற்போது எந்தப் புகாரும் வரவில்லை. யூரியா ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாஜக அரசு.

 

தமிழகச் சட்டப்பேரவைக்குத் தற்போது நடைபெறும் இந்தத் தேர்தல் கொஞ்சம் மாறுபட்டது. ஏன் என்றால், அதிமுக, திமுகவிற்கு மாற்றாக இதுவரை எந்தக் கட்சியும் இல்லை. ஒரு கட்சி மீது கோபம் ஏற்பட்டால், மற்றொரு கட்சிக்கு வாக்களிப்போம், அந்த கட்சி மீது கோபம் இந்தக் கட்சிக்கு வாக்களிப்போம்.

 

அதாவது, ஒரு முறை கிணற்றில் போய் விழுவோம், அடுத்த முறை ஏரியில் போய் விழும் நிலைதான் இருந்தது. ஆனால், தமிழக மக்களுக்கு முன்னால்

முதல் முறையாக ஒரு மிகப்பெரிய பலமான கட்சியாக பாஜக ரூபத்தில் உருவாகியுள்ளது.

 

சமையல் எரிவாயு மானியத்தில் நடந்த முறைகேட்டை, நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ஒழித்துவிட்டோம்.

 

ஊழலால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.