Show all

பழனி திருக்கோவிலில் சசிகலா வழிபட்டார்

பழனி மலையின் அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி நிலையத்துக்கு நேற்று காலையில் சசிகலா வந்தார். அவரை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மின் இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், அங்குள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட்டார்.

 

இதையடுத்து மூலவர் சன்னதிக்கு சென்ற அவர் தண்டாயுதபாணியின் உச்சிகால பூஜைகளில் கலந்து கொண்டார். அப்போது சுவாமிக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு வைதீகர் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயருக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் கோவில் சார்பில் சசிகலாவிடம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து தெற்கு வெளி பிரகாரத்தில் உள்ள 18 சித்தர்களையும் வழிபட்ட சசிகலா மீண்டும் மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரம் சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.