Show all

ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டு

ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நாபா கிஷோர் தாஸ் தற்காலிகநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓடிசா பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சார்சுகுடா தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தடுக்கப்பட்ட  நாபா கிஷோர் தாஸ்,  தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தாராம்.

இது பேரவை நிகழ்வுகளைப் பதிவு செய்து கொண்டிருந்த தொலைகாட்சி காமிராவில் பதிவானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை பேரவை கூடியது. அப்போது பேசிய பேரவைத் தலைவர் நிரஞ்சன் புஜாரி, காங்கிரஸ் உறுப்பினர் நாபா கிஷோர் தாஸ்,  அவையில் கேள்வி நேரத்தின் போது ஆபாச படம் பார்த்து, அவையின் கண்ணியத்தை கெடுத்து விட்டார். இது மிகவும் கேவலமான செயல், எனவே அவரைப் பேரவை நடவடிக்கையிலிருந்து ஏழு நாட்கள்  தற்காலிகநீக்கம்; செய்வதாக கூறினார்.

தன் மீதான  குற்றசாட்டை மறுத்த கிஷோர் தாஸ்,  இது எனக்கு  எதிராக செய்யபட்ட சதி என்றார். மேலும், நான்  தற்செயலாக யூடியுப்பை ஓப்பன் செய்து விட்டேன். ஸ்மார்ட் போன் அப்படி செயல்படும் என நான் யோசிக்கவில்லை. ஆனால் அந்த இணையதள பக்கத்தில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியாது என்றார்.

இது எனக்கு எதிரான சதியாகும். நான் எந்த வித விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.