Show all

நிதின் கட்கரி, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையில்...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் பேசிய அவர், மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை மாறி தற்போது புதிய நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். வேற்றுமையில் ஒற்றுமை என்பேதே இந்தியாவின் தத்துவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராம ராஜ்யம் என்பதே தங்களின் விருப்பம் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார். இந்த விழாவில் நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி,  மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்  ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்வு செய்தி அடிப்படையிலேயே ஒளிபரப்பு செய்யப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். கடந்த ஆண்டும் டிடி தொலைக்காட்சியில் மோகன் பகவத்தின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையாக வெடித்தது. 1925-ம் ஆண்டு விஜயசதமி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.