Show all

அமைதியின்மை ஏற்படுத்த புதிய முறைகளை பாகிஸ்தான்...

ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை ஏற்படுத்த புதிய முறைகளை பாகிஸ்தான் கையாள்வதாக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் குற்றம் சாட்டினார்.

1956-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதல் கலந்து கொண்ட பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ராணுவ தளபதி தல்பீர் சிங் வீரர்கள் மத்தியில் பேசுகையில் ”எதிர்காலத்தில் எந்த விதமான எச்சரிக்கையும் இன்றி குறுகிய காலப் போர் ஏற்படும் வகையான சூழல் தெரிகிறது. இதற்கான நாம் எந்த நேரத்திலும் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

கடந்த சில ஆண்டுகளில் நமக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற நுணுக்கத்தையும் நமது ராணுவம் கூடவே பெற்றுள்ளது. எல்லையில் அவ்வப்போது ஏற்படும் அத்துமீறல்களை வீரர்கள் விழிப்புடன் சமாளித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த புதிய முறை கையாளப்பட்டு வருகிறது. என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரீகரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.