Show all

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு புதிய சட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு புதிய சட்டம் இயற்றுவது குறித்து நடுவண் அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. இதற்கு நடுவண் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, புதிய சட்டம் தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலங்குகள் நலவாரியம் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க நடுவண் அரசு கடந்த ஆண்டு சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்ட திருத்தம் தொடர்பாக நடுவண் அரசு விலங்குகள் நலவாரியத்துடன் ஆலோசனை நடத்தவில்லை; தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை நீக்கப்படவில்லை என்பதால் உச்ச நீதின்றம் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தது.

இதனால், கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியவில்லை.

 

இந்நிலையில், இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ளும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய சட்டம் இயற்ற நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான, சட்ட மசோதா விரைவில் கூட உள்ள பாராளுமன்றத்தின்; மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.