Show all

50கோடி ஊழல்: அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் கைது

டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார்  2007 முதல் 2014-ம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது கோடிக்கணக்கான மதிப்புள்ள பணிகளை முறைகேடாக என்டீவர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும்,

ரூ.50 கோடி வரை நடந்துள்ள இந்த ஊழலில் ராஜேந்திரகுமார் தான் மூளையாக செயல்பட்டுள்ளார்  எனவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராஜேந்திர குமார் உட்பட 5 பேரை சிபிஐ இன்று கைது செய்தது.

 

அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் கைது செய்யப்பட்டதையடுத்து நடுவண் அரசை ஆம் ஆத்மி கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி துணை முதல் அமைச்சர் மனிஷ் சிசோடியா தனது சுட்டுரை பக்கத்தில் கூறுகையில்,

டெல்லி அரசை முடக்குவதற்காக நடுவண் அரசின் திட்டமிட்ட சதி இது. முதல் மந்திரியின்  முதன்மை செயலர் மற்றும் துணை செயலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி செயலர் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்றுள்ளது.

 

இன்று எங்களின் அமைச்சர் ஒருவர் ஊழல் தடுப்பு அமைப்பால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். டெல்லி அரசை செயல் இழக்கச்செய்வதற்கான முயற்சி என்பது இத்தகையை நடவடிக்கைகள் தெளிவாக காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.