Show all

மோடி வருகையால் பொதுமக்களுக்கு பல சிரமம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி.

தனது சண்டிகார் பயணத்தின் போது  மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக குறிப்பாக அங்குள்ள பள்ளிகளை மூட உத்தரவிட்டதற்காக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய விசாரணைக்க்கு உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சண்டிகருக்கு ஒருநாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான போக்குவரத்து முனைய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், அங்குள்ள முதுநிலை மருத்துவ கல்வி ஆராய்ச்சி மையத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.

பிரதமர் மோடி, பிரதமர் வருகையொட்டி, அனைத்து  தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சண்டிகாரில் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். பிரதமர் காரில் சென்ற சாலைகளில் இதர வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அவரது வருகையால் பொதுமக்களுக்கு பல சிரமம் ஏற்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

இதையடுத்து தனது வருகையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்காக பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இது குறித்து  டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:- சண்டிகார் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக, குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. இது குறித்து விசாரணை நடத்தி பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.