Show all

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்ததைக் கண்ட சாட்சியங்களை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழந்ததைக் கண்ட சாட்சியங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் பலியானதாக கூறப்படுகிறது. அதை ஒரு தரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இது பற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், விமான விபத்தைச் சந்தித்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயணங்கள் பற்றிய ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே வெளியிட்டுள்ளார்.

அந்த ஆவணத்தில் உள்ளதாவது,

கடந்த 70 ஆண்டுகளாக விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புடைய உறுதியான தவிர்க்க முடியாத 4 தனித்தனி அறிக்கைகள் உள்ளன.

1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜியுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில் ஜப்பான் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருகின்ற ஜனவரி 16-ம் தேதியன்று நேதாஜியின் விமான விபத்தை தொடர்ந்து 18-8-1945 அன்று இரவு நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.