Show all

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு விசயத்தில் நடுவண் அரசு பிடிவாதம்

திட்டமிட்டப்படி ஜுன் 24-ம் தேதி மருத்துவபடிப்புக்கான தேசிய தகுதி நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் பொதுநுழைவு தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் அமைச்சர் ஜே.பி.நட்டா எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

 

நட்டா கூறியதன் அடிப்படையில் தேசிய தகுதி நுழைவு தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய நடுவண் அரசு அவசர சட்டம் பிறப்பிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல லட்சம் ரூபாய் நன்கொடையாக பெரும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக அவசர சட்டம் நடுவண் அரசு கொண்டு வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

இதை தொடர்ந்து ஜே.பி.நட்டா அளித்த பேட்டியில் தேசிய தகுதி நுழைவு தேர்வை ரத்து செய்வதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

திட்டமிட்டபடி ஜுலை 24-ம் தேதி 2-ம் கட்ட தேர்வு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.