Show all

மருத்துவப் படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்த 17 விழுக்காட்டு தமிழக மாணவர்கள்! காரணம் நீட்

ஆண்டுதோறும் சட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என தெரிவித்துள்ள அறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா அமர்வு- மருத்துவப் படிப்பே வேண்டாம்; என்று முடிவு செய்த 17 விழுக்காட்டு தமிழக மாணவர்கள்- வஞ்சிக்கப்படும் தமிழகம். 

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சஅறங்கூற்றுமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக வேலூர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தொடர்ந்த வழக்குகளை உச்சஅறங்கூற்றுமன்றம் நேற்று விசாரித்தது. உச்சஅறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது. அப்போது, ஆண்டுதோறும் சட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என அறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா அமர்வு தெரிவித்துள்ளதாம். மேலும் இவ்வழக்கில் இன்றும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நமது பெற்றோர் ஓடாய் தேய்ந்து உழைத்து சம்பாதித்த பணத்தை வெட்டியாக பாஜக கார்ப்பரேட்டுகளுக்கு ஏன் அழவேண்டும் என்றெண்ணி- தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 17விழுக்காடு குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நடப்பாண்டில் 1.17 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 1.40 லட்சம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். 
ஆனால் இந்திய அளவில் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 74,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுதி 4,202 பேர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் 70 விழுக்காட்டினர்  அதாவது 2,916 மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து முதலாண்டில் தேர்ச்சியில்லாமல், இரண்டாவது  ஆண்டிலும், கார்ப்ரேட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.