Show all

இந்தத் தவறு யாரால் எப்படி நடந்திருக்கும்

விஜய் மல்லையாவால், உத்தர -பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் விவசாயி  ஒருவரின் இரு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

விஜய் மல்லையா வாங்கிய  கடனுக்கு உத்தரவாத நபராக மன்மோகன் சிங் என்ற விவசாயி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், விஜய் மல்லையாவுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியதையடுத்து, உத்தரவாதம் அளித்த பட்டியலில் இருந்த மன்மோகன் சிங்கின்  இரு வங்கி கணக்குகளையும் முடக்கி அவரை பிளாக் லிஸ்டில் வங்கி சேர்த்துள்ளது.

 

திடீரென தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால், ஒன்றும் அறியாமல் தடுமாறிய மன்மோகன் சிங், வங்கியின் உள்ளூர் கிளை மேலாளரை அணுகியுள்ளார். அப்போதுதான், விவசாயி மன்மோகன் சிங்கிற்கு விஜய் மல்லையாவுக்கு உத்தரவாத நபராக தன் பெயர் இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. விஜய் மல்லையாவை ஊடகங்கள் மூலமாக மட்டுமே கேள்விபட்டிருந்த  மன்மோகன் சிங் தன்பெயர் எவ்வாறு இணைக்கப்பட்டது என்பதை யோசித்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தார். பின்னர் உள்ளூர் வங்கி மேலாளரிடம் தனது நிலையை எடுத்துரைத்தார்.

 

இதை புரிந்து கொண்ட வங்கி மேலாளர், மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்திற்கு கடிதம் எழுதினார். இதன் பின்னர் விவசாயியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்தை அறிய முற்பட்ட போது,

 

மன்மோகன் சிங் வங்கி கணக்கு வைத்திருந்த பேங்க் ஆப் பரோடவின் நந்த்கான் கிளை மேலாளர் இது குறித்து கூறுகையில்,

 

விஜய் மல்லையா போன்றவர்களுக்கு ஒரு குறுவிவசாயி எவ்வாறு உத்தரவாதம் அளிக்கும் நபராக சேர்க்கப்பட்டார் என்பது ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்தார். இந்த தவறு எவ்வாறு நடைபெற்றது என்று தெரியவில்லை என்றார்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.