Show all

கபாலி படம் பாட்ஷாவை மிஞ்சுமா என்று கேட்கிறார்கள்.

தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களைச் சிறிய வயதில் முதல்நாளே பார்த்து ரசித்தவன் நான். பிறகு ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பிலேயே நானும் கதாநாயகனாக நடிப்பேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை.

ஆர்.எம்.வீ.யின் தயாரிப்பில் உருவான பாட்ஷா பெரிய வெற்றி பெற்றது. அப்படத்தின் விழாவில் நான் பேசிய பேச்சினால் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீ. பதவி இழந்தார். அடுத்தநாள் பயத்துடன் அவருக்கு போன் பண்ணினேன். அவர் இதற்காகச் சிறிதும் கவலைப்படாமல் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆர்.எம்.வீரப்பன் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்பார்கள். மருத்துவமனைக்குப் போன வேதனையை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவமனைக்குப் போகாத அளவுக்கு உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

இப்போது நான் நடிக்கும் கபாலி படம் பாட்ஷாவை மிஞ்சுமா என்று கேட்கிறார்கள். சத்தியமா அதுபோல எதிர்பார்க்காதீர்கள். பாட்ஷாவை மிஞ்சும் இன்னொரு படம் வெளிவர வாய்ப்பில்லை. அது ஆர்.எம்.வி.யால்தான் முடியும். மேடைக்காக நான் சொல்லவில்லை. பாட்ஷா கதாபாத்திரத்தை முதலில் வெளிப்படுத்தவேண்டாம் என்று முடிவெடுத்தபோது இல்லை, குறிப்பிட்ட ஒரு காட்சியில் வெளிப்படுத்தவேண்டும் என்று சொன்னவர் ஆர்.எம்.வி. பாட்ஷா படம் அவ்வளவு பெரிய ஹிட் ஆகக் காரணமே ஆர்.எம்.வி. தான். எப்போதும் ஒரு பாட்ஷாதான் என்று அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.