Show all

ஸ்மிரிதி இரானியின் கல்வித்தகுதி தகவல் குளறுபடி

நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் கல்வி தகுதி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது வேட்புமனுவில் கடந்த 1996ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி முறையில் கலைஇளவல் பட்டப்படிப்பு படித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.  தொடர்ந்து  கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின் போது, குஜராத்தில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி தனது வேட்பு மனுவில், டெல்லி பல்கலைக்கழகத்தில்; தொலைதூர கல்வி முறையில் வணிகவியல் இளவல் பட்டப்படிப்பு படித்துள்ளதாக முரண்பட்ட தகவல் அளித்திருந்தார்.

 

 பின்னர் கடந்த 2014ம் ஆண்டு அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டபோது தனது வேட்பு மனுவில், டெல்லி பல்கலைக்கழகத்தில்; (ளுஉhழழட ழக டநயசinபை) வணிகவியல் முடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த முரண்பாடான கல்வி தகுதி தொடர்பாக அகமது கான் என்ற எழுத்தாளர் இரானி தவறான தகவலை குறிப்பிட்டு தேர்தலில் போட்டியிட்டுள்ளதால் அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்க வேண்டும் என டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி ஹர்விந்தர் சிங் கடந்த நவம்பர் 20ம் தேதி தேர்தல் தேர்தல்ஆணையம் மற்றும் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகிகள் இரானியின் கல்வித்தகுதி குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

 

ஆனால் அன்று ஆஜரான நிர்வாகிகள் தற்போது அந்த ஆவணங்களை தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வரும் மே 3ம் தேதி இது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் சமர்ப்பிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.