Show all

பாமக ஆட்சிக்கு வந்தால், சென்னை மக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக அளிக்கப்படும்

பாமக ஆட்சிக்கு வந்தால், சென்னை மக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக அளிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளரும், இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் நாம் விரும்பும் சென்னை என்ற தலைப்பில் அன்புமணி பேசியது:

 இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் இல்லாத பாரம்பரியம் சென்னை மாநகருக்கு இருக்கிறது.

 ஆனால், 50 ஆண்டுகால திமுக-அதிமுக ஆட்சியில் சென்னையே சீரழிந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வௌ;ளம் வருகிறது.

 எனினும், இதிலிருந்து பாடத்தை அரசு கற்கவில்லை. 1979-இல் அமைக்கப்பட்ட சிவலிங்கம் குழு, வௌ;ளத்தைத் தடுப்பதற்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

 இந்தப் பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

 செம்பரம்பாக்கம் ஏரி போல சென்னைக்கு மேலும் இரண்டு ஏரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

 பாமக ஆட்சி வந்ததும் சென்னையையொட்டிய பகுதிகளில் புதிதாக 10 ஏரிகள் அமைப்போம். இதை வௌ;ளநீர் வடிகாலாகவும், குடிநீர் தேவையைப் போக்கும் வகையிலும் பயன்படுத்துவோம். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.

சென்னைக்குப் போக்குவரத்து மிகவும் முக்கியம். 20 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் அரசு பேருந்துகள் இயங்கின. அப்போது 20 லட்சம் மக்கள் வாழ்ந்தனர். இப்போது 50 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 3,500 பேருந்துகள்தான் ஓடுகின்றன.

 குறைந்தபட்சம் 8 ஆயிரம் பேருந்துகள் இயக்க வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால் 8 ஆயிரம் அரசு பேருந்துகளை இயக்கி, அனைவரையும் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பயணிக்கச் செய்வோம்.

 முதலில் சென்னையிலும், பிறகு படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

 இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.

 ஆனால், இலவச சேவைகளை வழங்குவோம். கல்வி, சுகாதாரத்தை இலவசமாக அளிப்போம் என்றார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.