Show all

தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என முன்பு பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்

தீவிரவாதத்தை கை விட்டால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என ஐநாவில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்ட வட்டமாக தெரிவித்தார். ஐநாவில் நடைபெற்று வரும் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் ஐநாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை ஐநாவில் தெரிவித்தது. இந்தச் சூழலில் நேற்று ஐநா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.

அப்போது அவர் தனது பேச்சில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டால்தான் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புகள் உருவாகும். நவாஸ் முன்வைத்த 4 அம்சங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதத்தின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. மும்பை தாக்குதலுக்கு சதி செயலில் ஈடுபட்ட லக்வியை தண்டிக்க வேண்டும். அல்லது அவரை வெளியேற்ற வேண்டும். தனது பேச்சின் போது உலக அமைதிக்கு 4 அம்சங்களை நவாஸ் வெளியிட்டார். அவர் கூறிய 4 அம்சங்கள் எல்லாம் தேவையில்லை. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்திக் கொண்டாலே போதும் என்று பேசினார். பின்னர் இது குறித்து சுஷ்மா நிருபர்களிடம் கூறுகையில், பேச்சு வார்த்தைக்கு இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் தீவிரவாதத்தை ஆதரித்துக் கொண்டே பேச்சு வார்த்தையை நடத்த முடியாது.

தீவிரவாதம் என்றால் தீவிரவாதம் தான். அதில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்று எதுவும் கிடையாது. தீவிரவாதத்தை நாம் அவ்வாறு வேறுபடுத்தி பார்க்க முடியாது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்க மாட்டோம். தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என முன்பு பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது. மேலும் எல்லையில் அத்துமீறி புதிய புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. அவ்வாறு தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகள் இந்தியா வசம் பிடிபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் சுமூகமான முடிவுகளை எடுக்க முயற்சி செய்தால் இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு இந்தியா தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.