Show all

தலித் நலன் குறித்து பொது மேடைகளில் மோடி பேசுவது, வெறும் கண்துடைப்பே

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையட்டி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லக்னோவில்  சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சித்தலைவர் மாயாவதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,

 

தலித் அல்லது பின்தங்கிய வகுப்பை சேர்ந்த ஒருவரை பிரதமராகவோ அல்லது ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாகவோ உருவாக்க பா.ஜனதா அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் முடியும். ஆனால் அவரால் தனது சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. பா.ஜனதா அல்லது ஆர்.எஸ்.எஸ்.சின் கொத்தடிமையாகவே அவர் தொடர்ந்து இருக்க வேண்டும்.

 

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசே தெளிவான உதாரணம். தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் பிரதமர், அவரது சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு எதையும் செய்யாமல் விட்டுவிட்டார். தேநீர் வியாபாரிகளுக்கு அவர் எதுவும் செய்யவில்லை.

 

தலித் இட ஒதுக்கீடு மற்றும் தலித் நலன் குறித்து பொது மேடைகளில் பிரதமர் மோடி பேசுவது, அரசியல் கட்டாயத்தின் பேரில் தான். இது வெறும் கண்துடைப்பாகவே தெரிகிறது.

இது தொடர்பாக அவரிடம் தெளிவான நோக்கம் இருந்திருந்தால், இட ஒதுக்கீடு கொள்கையை நீர்த்து போகச்செய்யும் நோக்கில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தலைவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுத்திருப்பார்.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.