Show all

.உலக ஹாக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

உலக ஹாக்கி லீக் பைனல் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாகவும், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  உலக ஹாக்கி லீக் பைனல் போட்டி வரும் 17-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெறுகிறது.

அணி விவரம்: கோல் கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங். பின்களம்: பைரேந்திர லகரா, கோதாஜித் சிங், வி.ஆர்.ரகுநாத், ஜஸ்ஜித் சிங் குலார், ரூபிந்தர் பால் சிங். நடுகளம்: சர்தார் சிங், சிங்லென்சனா சிங், தேவிந்தர் வால்மீகி, மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், டேனிஸ் முஜ்தபா. முன்களம்: எஸ்.வி.சுனில், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், லலித் உபாத்யாய், தல்விந்தர் சிங்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.