Show all

வருகிற 2ம் தேதிமுதல் பீகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி தீவிரமாக ஈடுபட உள்ளார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் வருகிற 2ம் தேதி முதல் பீகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி தீவிரமாக ஈடுபட உள்ளார் என பாஜ தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் ஒரு வார கால சுற்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து நாடு திரும்பியதும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். செப்டம்பர் 29ம் தேதி நாடு திரும்பும் மோடி, அக்டோபர் 2ம் தேதி முதல் மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பீகாரில் ஏற்கனவே முசாபர்பூர், கயா, சகர்சா, ஆரா, பாகல்பூர் ஆகிய இடங்களில் மோடி பிரசாரம் செய்தார்.  மோடி மட்டுமின்றி தேர்தலை முன்னிட்டு மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 40 தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இருப்பினும் மோடி தலைமையில் அதிகபட்ச பிரசார கூட்டங்களை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. கடந்த காலத்தில் பாஜக கூட்டணியில் இருந்த போதிலும் கூட குஜராத் கலவரத்திற்கு பிறகு மோடியிடம் இருந்து சற்று தன்னை விலக்கியே காட்டி வந்த நிதிஷ், தன்னை மதசார்பற்ற தலைவராக காட்டிக் கொள்ளும் இமேஜைத் தக்க வைக்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்தார். பீகாரில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில் நிதிஷ் இதில் கவனமாக செயல்பட்டு வருகிறார். எனவே தற்போது வந்துள்ள சட்டமன்ற தேர்தல் மோடி மற்றும் நிதிஷ் ஆகியோருக்கு ஒரு கவுரவ பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பீகாரில் மோடியின் பிரசாரத்தைக் கொண்டு நிதிஷூக்கு ஒரு வலுவான  போட்டியை உருவாக்க பாஜக முடிவு செய்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.