Show all

நாட்டை நிதிப்பற்றாக்குறையில் எடுத்துச் செல்லும் மோடி அரசு!

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்கு முன்பே இலக்கு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக நடுவண் அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால் அரசின் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்து வருவதால் நிதிப் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.

அரசின் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் நிதிப் பற்றாக்குறை. வருமான வரி வசூல் அதிகரிப்பு, அரசின் பங்குகள் விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததைவிட சிறப்பான முறையில் இருப்பதால், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கான 3.3 விழுக்காடு என்ற இலக்கில் எந்த மாற்றமும் இல்லை என்று கடந்த மாதம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.

கடந்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பதிகையின் போது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 விழுக்காடாக இருக்கும் என குறிப்பிடப்பட்டது. முன்பு இது 3.2 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 

நடப்பு  நிதியாண்டு இலக்கான 3.3 விழுக்காடு ஜிடிபி என்பது 6.24 லட்சம் கோடி ரூபாய். அது வெறுமனே நான்கே மாதத்தில் 85 விழுக்காடு இலக்கை எட்டியது. மூன்று மாதத்திற்கு முன்பே ரூ.6.48 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த அளவானது வரவு செலவுத் திட்டம் மதிப்பீட்டில் 103.9 விழுக்காடாகும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,988.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.