Show all

தாத்ரி சம்பவம் குறித்து தனது மவுனத்தை கலைத்தார் பிரதமர் மோடி.

நாட்டின் வளர்ந்துவரும் சகிப்புத்தன்மைஇன்மைக்கு நடுவண் அரசு பெறுப்பேற்கவில்லை என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்,

நாட்டின் அமைதியை நிலைநிறுத்துவது அரசின் கடைமை என வலியுறுத்தியுள்ளது.

நாளிதழ் ஒன்றிற்கு இன்று பேட்டி அளித்த பிரதமர் மோடி, எதிர்கட்சிகளின் கடும் நெருக்கடியை தொடர்ந்து தாத்ரி சம்பவம் குறித்து தனது மவுனத்தை கலைத்தார். பிரதமர் அளித்த பேட்டியில்,

தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அச்சம்பவத்துக்கு நடுவண் அரசை குறை கூறுவதற்கு பின்னணியில் என்ன நியாயம் இருக்கிறது?

தாத்ரியில் நடந்த சம்பவமும், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சம்பவமும் வருந்தத்தக்கது.

ஆனால், அதற்காக ஏன் நடுவண் அரசை குறை கூற வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமரின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்,

இது போன்ற சம்பவங்களில் நடுவண் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பொறுப்புகளில் இருந்து பிரதமர் நழுவ முயற்சிப்பது பொருத்தமானது இல்லை என்றார்.

அதேபோல், மற்றொரு காங்கிரஸ் தலைவர் ராஷித் ஆல்வி பிரதமரின் கருத்து துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மகேஷ் ஷர்மா, சாத்வி பிரச்சி, ஆகியோர் தாத்ரி சம்பவம் குறித்து வெறுப்பூட்டும் வகையில் பேசியிருந்தனர்.  அவர்களைப் பிரதமர் கண்டிக்காது ஏன்?

அப்போது அமைதியாக இருந்து விட்டு இப்போது தாத்ரி சம்பவம் குறித்து பிரதமர்  பேசுவது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.