Show all

மோடியின் 65வது பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து.

பிரதமர் நரேந்திர மோடியின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு அவருக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ராகுல் தனது டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 19ந்தேதி ராகுல் பிறந்த நாளில் டுவிட்டர் வழியே பிரதமர் தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்து கொண்டார்.  அதில், தங்களது உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.  மோடியின் பிறந்த நாள் வாழ்த்திற்கு ராகுல் உடனடியாக நன்றி தெரிவித்து கொண்டார்.  ராகுலுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தது அதுவே முதல் முறை.  மோடியை புகழ்ந்து பேசியதற்காக கட்சியின் எதிர்ப்பை சந்தித்ததுடன், செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும், மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது அரசியலுக்கு எதிராகவே செயல்படுவேன் என்பதனையும் தரூர் சுட்டி காட்டியுள்ளார்.  அவர் தனது டுவிட்டர் செய்தியில், நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...  இந்தியாவிற்கு ஆற்றலுடனும் ஈடுபாட்டுடனும் உங்கள் சேவையை தொடருங்கள்.  உங்களது அரசியலுக்கு எதிராகவே நான் செயல்படுவேன்.  ஆனால் மரியாதையுடன் என தெரிவித்துள்ளார்.

நில மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  விவசாயிகள் குறித்த தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகளைத் தாக்கி

வருகிற ஞாயிற்று கிழமை பெரிய அளவில் பேரணி ஒன்று நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.